சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

அழிவென்று தெரிந்தும்
அரசே ஏற்று நடத்தும்
அவல நிலை!
பள்ளிச் சிறுவர்கள்
பதுங்கிச் சென்று
பாதாளம் அது என்றறியாமல்
விழும் பெரும்பள்ளம்!
கலகலப்பு என்றெண்ணி
கல்லூரி மாணவன்
கைகளில் ஏந்தினான்
கல்வியை மறந்து காலனுக்குக்
கந்து வட்டியாக்கினான் அவன் உயிரை!
கல்யாணம் காதுகுத்துக் கருமாதி
அனைத்திலும் இதன் பங்கு பெரும்பாதி!
கலகலப்பாய் ஆரம்பித்து
கைகலப்பில் முடித்துவிடும்
கலாச்சார சீரழிவு!
நாகரீகம் என்று ரீங்காரமிடும்
நரகத்தின் வண்டு - நம்
செவிகளைத் துளைக்கும் முன்
அடித்து விரட்டு - அதை
ஆங்காரம் கொண்டே!

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (8-Nov-14, 5:39 pm)
பார்வை : 131

மேலே