ஊமை 0049

கண்ணாடி முன்னின்றபடி
என்னிடம் பல நூறு வினாக்கள்
அனைத்தும் அவமானத்தின் வடுக்கள்
கொடுக்கின்ற சொத்துக்கள்

யாரின் பாவப்பதிப்புயிது
என்னை ஈன்றவர்களின்
பாவத்தின் பயனா?
என் முற் பிறவியில்
யான் செய்த பாவச்செயலா ?

இன் வாழ்வின் அர்த்தத்தை
அழுகையுடன் மட்டும் தான்
காண்பேனா?

எனக்குள் அழகாக பேசுகின்றேன்
அழகாக பாடுகிறேன் -ஆயினும்
வார்த்தைகள் வெளிக்கொணரும்
போது தான் ஊமையாகின்றேன்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (8-Nov-14, 9:57 pm)
பார்வை : 132

மேலே