காதல் பிரசவம் - நாகூர் கவி

எண்ணிலடங்கா
கவிதை குழந்தைகளை
என்னால் பிரசவிக்க செய்த
என்னில் அடங்கா
என்னவளே........

பெண்ணினமென்றால்
குழந்தைகளை பெற்றெடுப்பர்...
நீ ஒருத்தி மட்டும்தான்
கவிக்கு ஆன் பட்டனை போட்டு
கவிதைகளை பிரசவிக்க வைத்து
எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்....

அதனால்தான்
எனது ஒவ்வொரு கவிதைக்கும்
உனது பெயரையே முகவரியாய்
சூட்டி மகிழ்கிறேன்...

ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு கரு தேவை....
என் காதல் குரு
நீயானதால்
இடைவேளையின்றி
இடைவெளியின்றி
கருத்தரித்துக்கொண்டிருக்கிறேன்....

இந்த காதல் மழலையை
கவி மழையாய்
மாற்றிய பெருமை
உன்னையே சாரும்...

நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்தாய்....

சந்தடி சாக்கில்
என்னுள் புகுந்து
சந்த அடி போட வைத்தாய்...

ஒரு சொல்லை செய்யுளில்
திரும்ப திரும்ப சொன்னால்
சொற்பொருள் பின்வருநிலையணியாமே....?

அப்படியெனில்
என் வாழ்நாளில்
உன் பெயரையே
திரும்ப திரும்ப
உச்சரிக்கிறேனே நான்...
இது என்ன....?
காதல் பின்வரும்நிலையணியா...?

இலக்கிய மேதைகளிடம்
இவ்வணி பற்றி
எப்படி மொழிவேன்....?

உன் பெயரை
சொல்லி சொல்லி
அவர்களிடமும் வழிவேன்...

அன்பே...
காதலெனும் ஓரணியில்
விரைவில் வருவாய்...

இல்லையேல்
கவிதையெனும் பிள்ளையோடு
எழுத்து வீதியில் பேரணியாய் திரள்வேன்...

அதிலும் என் கவிகள்
உன் பெயரணிந்தே....!

எழுதியவர் : நாகூர் கவி (9-Nov-14, 12:03 am)
பார்வை : 526

மேலே