சுரேஷ்-ராதா-வித்யா

சுரேஷ்-ராதா-வித்யா

இன்று காலை சரியாக மணி 10.5 சாலையின் ஒரு வளைவில் இரு இரு சக்கர வாகனங்கள் மோதுவதாய் வந்து நிதானித்து நின்றன. சற்றே நிலை உணர்ந்தவளாய் என்னவென்று எட்டிப்பார்த்தேன் புன்னகையோடு சுரேஷ் அண்ணா....! மாநிறம், கொஞ்சம் தொப்பை, ஆங்காங்கே நரை முடிகளோடு பெரிதாக மாற்றமில்லாமல் 10 வருடங்களுக்குப் பிறகும் என்னால் அடையாளம் காணமுடிந்தது அவரை. என்னமா இவ்ளோ பெரிய பொண்ணாயிட்ட...? நல்லா இருக்கியா சாமீ என்று தொடங்கி சில நிமிடங்கள் தொடர்ந்து சிறு புன்முறுவலுடன் முடிந்தது அவருடனான சந்திப்பு. அவர் விழிகள் எனை உற்று நோக்கிய விதம் எனை வகுப்பறையில் இன்றைக்கெல்லாம் ஏதேதோ செய்தது............ பழைய நினைவுகள்...... புதிய உணர்வுகள்..... ஆயிரம் கேள்விகள்....... முடிவில்லா பதில்கள் பிரசவித்துக் கொண்டே இருந்தத.....என்னுள்.....!!

அப்போது நான் 3ஆம் வகுப்பு....சித்ரா டீச்சர் tution......கோட்டை வீடு.......' கோட்டை வீடு..." எங்கள் ஊரிலேயே மிகப் பெரிய பண்ணை கோட்டை வீடு..... பரம்பரை பரம்பரையாக கோவில் நகைகள் வைக்கும் கருவூலம் இருக்கும் வீடு அதுதான். எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் நாந்தான் பால் வாங்கச் செல்வேன்.......ஆம்......அதே கோட்டை வீட்டிற்குத்தான். இரு பெரிய கதவுகள்......சந்தன நிறத்தில்....மேல் கூர் வேலோடு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கும். பெரிய மதில் சுவர்.......அக்கதவிற்குள் நுழைந்தால்....சிவப்பு மற்றும் சந்தன நிற அரளி மரங்கள்.....அதில் பூக்கள்......செண்பக மரங்கள்......ஜாதிக்கொடி.......மற்றும் இன்னும் அழகுச்செடிகள்.........விதவிதமாக வைக்கப் பட்டிருக்கும்...... அதெல்லாம் கடந்து போகவே கிட்டத்தட்ட 10 நிம்டம் ஆகும். அவ்ளோ பெரிய வீடு..........

உள்ளே எல்லாமே தேக்கு மரங்களால் இழைக்கப் பட்டிருக்கும்.....பழம்...கரும்புச்சாறு...இன்னும் என்னென்னவோ கொண்டு அந்த வீட்டின் தரை இருக்கும். உள்ளே நுழைந்தாலே ஒரு விதக் குளுமை...... அந்த வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் பெரிய நிலைக்கண்ணாடி...எனக்கு மிகவும் பிடிக்கும்......இங்கிலாந்திலிருந்து அவர்களுக்கு யாரோ அன்பளிப்பாகக் கொடுத்தது என்று சுரேஷ் அண்ணாவின் அம்மா....அக்குதாயம்மாள் என்னிடம் சொல்லி இருக்கிறார்........! அந்த வீடு என் கனவு என்று கூட சொல்லலாம்......... அந்த வீட்டிற்கு பால் வாங்கச் செல்வதே எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.......!!

நான் போகும் போதெல்லாம் சுரேஷ் அண்ணா குளித்துவிட்டு "ஹிந்து" பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். இங்க வா..... என்ன பாக்கற...என்ன கட்டிக்கிறையா....இந்த வீடு உனக்குதான்னு சொல்லுவாரு.....! நானும் சிரிச்சுட்டே ஓடிடுவேன்......... சுரேஷ் அண்ணாவின் வாழ்வில் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் ராதா அக்கா........! அவர் வீட்டிற்கு எதிர்வீடு. நல்ல உயரம்......மாநிறம்......மங்களகரமான முகம்.....இடைக்கு கீழ் தவழும் முடி.......இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..........அவ்வளவு மென்மையான பெண் அவர்.....!

ராதா அக்கா......என் அக்காவின் நெருங்கிய தோழி........என் பெற்றோரின் மற்றொரு பெண்..... எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது... சுரேஷ் அண்ணா........நான் பால் வாங்கப் போகும் போது என்னிடம் ஒரு பேப்பர் கொடுத்து அதை ராதா அக்காவிடம் கொடுக்கச் சொன்னார்.......! நானும் கொடுத்தேன்......பதில் அன்று மாலை நான் பால் வாங்கப் போகும்போது இவர் என்னிடம் கொடுத்து அனுப்புவார்....! காதலில் மூழ்கிக் கொண்டிருந்தனர்....அவர்கள்.

எனக்குத் தெரிந்து இவர்கள் தான் அம்பிகாவதி அமராவதியாக இருந்திருக்க வேண்டும்....என் இளம் வயதில்.....ஆண்டுகள் நகர்ந்தன...
நான் சித்ரா டீச்சர் வீட்டில் tution -இல் இருந்தபோது அவசர அவசரமாக அன்று விடுமுறை அறிவிக்கப் பட்டது. காரணம் தெரியாமல் நானும் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தேன்...... என் வீட்டில் எல்லோரும் அழுது, கத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர்...... எனக்கு ஒன்றும் புரியவே இல்லை........

நானும் ஓடி போய் பார்க்கும் போது ராதா அக்காவின் சடலம்........அப்போதுதான் இறக்கி வைக்கப் பட்டுக் கொண்டிருந்தது......அந்த நிமிடம்.....அந்த நொடி ........என்னால் இப்போதும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை......என்னிலிருந்து கண்ணீர் ஆரம்பித்தது.....எல்லோரும் என்னை வெளியேற்றினர்.....சின்ன பசங்க உள்ள வரக்கூடாது.......ஊரே கதறியது.......தேடித் தேடிப் பார்த்தேன்........சுரேஷ் அண்ணா மட்டும் அங்கில்லை.......அவரின் குடும்பத்தாரும் அங்கு இல்லை.......என் வீட்டில் யாரிடம் எது கேட்டாலும் என் மீது எரிந்து விழுந்தனர்.......

தற்கொலையாதளால் போலிஸ் வந்தால் பெரும் கேவலம் என்று நினைத்து இரவோடு இரவாக சடலத்தை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்........என் வீட்டைக் கடந்துதான்.........! அந்த வலி இன்னும் என் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.......அன்றிலிருந்து 5 நாள் கழித்து சுரேஷ் அண்ணாவிற்கு ஒரு கிலோ தங்கம்......ஒரு கார்.........ஒரு கோழிப்பண்ணை.....இன்னும் பிற.......உடன் கவித்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அப்போதுதான் தெரிந்தது.......ராதா அக்காவின் மரணத்திற்கு காரணம் எனக்கு............!!

பனி விலகிய இன்றைய பொழுது அடர் இருலாகவேத் தொடர்கிறது இன்னும்........ஏதோ ஒரு அழுத்தம்....பெரும் வலி......நினைவுகள் பிரல்கின்றன.....போர்தொடுக்கின்றன......இன்னும் ராதா அக்கா கொடுத்த அந்த பிங்க் நிற பன்னீர் ரோஜாவின் மனம்........என்னில் எங்கெங்கிலும் நிறைந்திருப்பதாய்............! என்னில் ஒரு குற்ற உணர்ச்சி........இன்றைக்கும்.......ஒரு அழியா வடு....... ராதா அக்காவின் மரணித்திற்கு முன்னான சில நொடிகள்....என்னோடும் நான் சுமந்துச் சென்ற காலனான அந்த உயிர்வாங்கும் கடிதத்தோடும் முடிந்திருக்க வேண்டும்............!!

நீண்ட இடைவெளிக்குப் பின்னான இந்த சந்திப்பும்...அவரின் ஊடுருவும் பார்வையும்......சுரேஷ் அண்ணாவிற்கும் இதே உணர்வை ஏற்படுத்தி இருக்கக் கூடும்....... இதே குற்ற உணர்வில்......வாழ்நாளெல்லாம் நினைவுகளை அவர் சுமக்கக் கூடும்.........!







-இக்கதையில் வரும் பெயர்கள்......சம்பவங்கள்........அனைத்தும்......உண்மையே....! இப்போது என் மனம் கொஞ்சம் லேசாகிறது..........

எழுதியவர் : வித்யா (10-Nov-14, 4:41 pm)
பார்வை : 201

மேலே