என் காதலி
என் அழகுப் பெண்ணே.
என்னழகு உன்னழகு.
வண்ண அழகு
வார்த்தெடுத்த
வடிவமோ உன்னழகு - உன்
கண்ணழகுக் கண்ட என்
கண்களுக்கு
கருந்திராட்சைப் பழங்கள்
விருந்துக்கு வைத்தாற்போல்
விழி சிமிட்டிப் பார்க்குதடி - நீ
முறிக்கிவிட்ட
முடியழகில் - சில
முடிகள் உன் விழியோரம்
முத்தமிட்டுக்
கொண்டு இருக்கிறதடி - உன்
முக அழகில்
முத்தழகாய் விளங்கும்
மூக்கின் அழகுக்கு - ஒத்தக்கல்
மூக்குத்தி உன்னழகை
மேலும் மிளிர வைக்குதடி.
சொல்லழகை
சொக்கவைக்கும் - அந்த இரு
செவ்விதழகள் இணையும்போது
செம்மீன் ஒன்று
சுவாசிப்பதைப் போல் வாசிக்குதடி.
கேள்விக் கணையாய்
கொண்ட இருகாதோரம் - எதிர்
பதில் உரைத்தாற்போல் - மீனின்
செதில்களாய் இரு தோடுகள் - இதயத்தை
சிலிர்க்க வைக்கின்ற இரு கோடுகள்.
வியக்க வைக்க வந்தவளா நீ ! - என்னுள் காதலை
விழிக்க வைக்க வந்தவளா நீ ! - என்னோடு உறவை
விதைக்க விக்க வந்தவளா நீ !- உன்
விழியாலே என்னை சிறைவைத்தாய்!
விழியாளே!
என்னை எங்கே சிறைவைத்தாய்.
மலைக்க வைத்தவளே ! - என் மனமெனும்
மலையசைக்க நின்றவளே ! - பனி
மலை உருக்கினார் போல் - நானும் உன்
மேனி அழகைக் கண்டு - என் மனமெனும்
மலை அசைந்து உன் பருவத்தின்
மடிமீது வந்து - நான், எனது
திருட்டுப் பார்வையால் உன்மேல்
வீழ்ந்தேனடி - என்னுள் நானோ
திணறுகின்றேன்.- உன்னுள் நான்
உள்ளதை உணருகின்றேன்.- என்னுள் நீ
விழிப்பாயடி! - உன்
விழியால் என்னை பாரடி - நம் காதல்வாழ
வேண்டாமடி ஒருதலைக் காதல்.