எழுவது தவறல்ல - சித்ரா

நடத்தியது நீயென்று தெரியாமல்
நடப்பதை ஏன் குறை கூறுகிறாய்?

வடித்தது(உருவாக்கியது) நீயென்று அறியாமல்
வாழ்க்கையின் மீதெ பழி போடுகிறாய்

துடிப்பது நீயென்பதாலோ கண்ணீரைத்
துடைக்க ஒரு கை தேடுகிறாய்

மாற்றும் சக்தி உனக்கிருப்பதை
மறந்து ஏன் மனம் வாடுகிறாய்?

வாழ்க்கையின் நொடி ஒவ்வொன்றையும் நீயே செதுக்குகிறாய்
விளையும் துன்பங்களை மட்டும் ஏனோ ஒதுக்குகிறாய்

விழுவது குறையல்ல!அழுவது அழகல்ல!எழுவது தவறல்ல!  

எழுதியவர் : சித்ரா (11-Nov-14, 1:28 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : eluvathu thavaralla
பார்வை : 464

மேலே