வகுப்பறை பொக்கிஷம்
தொலைந்து போன நட்புகள்,
மறைந்து போன பள்ளிகூட உறவுகள்,
வீட்டை மறந்து கூட்டில் வாழ்ந்த
நம் பள்ளிகூட கட்டிடங்கள்
காலமெல்லாம் நினைத்தாலே-இனிக்கும் .....
வானத்தை போல் நீண்டு போன
பள்ளி பயணங்கள்
மேகத்தை போல் சூழ்ந்து கொண்ட
பள்ளி பருவங்கள்
வானவில்லை போல் -அதிசயமாய்
தெரிந்த ஆசிரியர்கள்
இதை நினைத்தாலே இனிக்கும்...
யாரென்று தெரியாமல் புதியதாய்
மலர்ந்த நட்புகள்.
காற்றை போல் எங்கும்-திரிந்த
இளமை பருவங்கள்,
சாதி-மதம் இல்லாமல் அமர்ந்த
வகுப்பறை பெஞ்சிகள்.
இதை நினைத்தாலே கண்ணீர் வர துடிக்கும்...
வருடங்கள் கடந்தாலும்-வயதுகள் ஆனாலும்
நாம் வாழ்ந்த பள்ளிகூடம்,
நாம் எடுத்த புகைபடம்
என்னுள் பொக்கிஷமாய் புதைந்து
கொண்டுதான் இருக்கிறது.....
மு.மணிமாறன்
த/பெ முரளி
தமிழ்நாடு அரசு இசைகல்லுரி
சென்னை 600 028
நம்பர்: 9500371764