எனக்குத் தெரிந்தவை
இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதே வாழ்க்கை.
நேரம் பொன்னானது அதை நீ வீணாக்காதே.
நட்பிற்கு இலக்கணம் நல்ல வழிகாட்டல்
கோபமடைவதை விட சிரிப்பது இலகுவானது.
கோபம் பாவத்தை தேடிவிடும்.
புன்னகை உள்ள இடத்தில் பொன்னகைகள் தேவை இல்லை.
நமக்கு நன்மை எது என்பதை கடவுள் அறிவார்.
அறிவில் சிறந்த அறிவு பகுத்தறிவு.
சிறு கிளையாக உள்ள போதே வளைப்பது நன்று
உண்மையாக நடப்பவனுக்கு உலகமே எதிரி தான்.
தன் கையே தனக்கு உதவி.
எரியிரதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும்.
காலம் வரும் என நினைத்துக் கடமையை கை விட்டு விடாதே.
நான் என்ன செய்கின்றேன் என்பதை உணர்வது சுய தரிசனம்.
பெற்ற தாயின் ஆசிக்கு மேல் எதுவும் இல்லை.
நம்ப நட நம்பி நடவாதே.
பெற்ற அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்.