நண்பா- தொடர்ச்சி-தேவி
நண்பா
நான் ரசிக்கும் பூக்களை
நீ சேகரித்து தந்தாய்
நான் விரும்பும் எழுத்தரின்
புத்தகத்தை
எனக்காய் பரிசளித்தாய்
நான் வியக்கும்
இயற்கை அழகை
புகைப்படம் எடுத்து
தந்தாய்
நான் நேசித்தவனை
எனக்காக என் வீட்டில்
பேசி சம்மதிக்க வைத்து
திருமணமும் செய்வித்தாய்
என் நண்பா
இதற்கெல்லாம் நான் உனக்கு
என்ன செய்யபோகிறேன் என்றேன்.
நீ சொன்னாய்
என் உயிர் பிரியும் வரை
என் தோழியாய் இரு என்று.