வாழ்ந்திடுவேன் உன்னோடு

தினம் தினம் உன்னிடம்
நீராகாரம் குடித்ததால்
இலக்கிய வானில்
பறக்கிறேன்
நித்தமும் நினைவிலும்
ஆரோக்கியமாக ...!

எமக்கு முன் வாழ்ந்த உன்
மடிப் பால் தீர குடித்த
மூத்தோர் பிள்ளைகள்
வள்ளுவனாரும் கம்பரும்
இளங்கோவடிக ளாரும்
எம் வீரச் சாமிகள்...

பாரதியாரும் தாசனாரும்
எரிமலைகள் தமிழுக்கும்
கவிதை உலகிற்கும்
காவல் தெய்வங்களாம்
எங்களுக்கும் .....

எம்மிடம் இருப்பது போதும்
பொன்னோ! பொருளோ! பூமியோ!
எதுவும் வேண்டாம் எனக்கு
என்னை நீ காத்து
விண்ணையும் மண்ணையும்
போற்றி வெல்லும்
துணிச்சல் போதும் ...

உன்னிடம் உயிர்மெய் கற்று
இலக்கியக் கடலில் முத்தெடுத்து
போனார்கள் வெளிநாட்டு மொழிகள்
எங்களுக்கும் பெருமையே....

உன் கைப் பிடித்து
நடக்க ஓட ஆட இசைக்க நடித்துப் பழக
துணிச்சலும் தெம்பும்
இருந்தால் போதும்
என்றென்றும் மறவேன் தாயே....!
அற்புதக் கவிதைகளைப்
படைத்தே வாழ்வேன்
உன்னோடு.....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (13-Nov-14, 9:49 am)
பார்வை : 105

மேலே