விரல்களின் நுனியில்
மொளனம் மோசமாய்
பரவிக் கிடக்கும்
உயிரற்ற மாலையின்
உணர்வற்ற விளிம்பில்
வாழ்வின் அர்த்தம்
வாசிக்க அலைந்தேன்
யோசனை செய்வதாய்
யோசனை இன்றியே
உருளும் காலத்தை
மிரளும் கண்களால்
கண்டும் காணாமல்
கைவிரல் மண்ணளாவி
சிறுவர் கைப் பட்டமாய்
சிடுக்குடன் பறக்கிறேன்
சுழன்று வாலறுந்து.
ஆயினும் இதோ உன்
விரல்களின் நுனியில்
உதிரும் உன் சொற்கள்
பதறாத என் மனதையும்
பதறச் செய்வதேன்!.