காதல் வந்ததே

மொத்தத்திலே
அவள் தந்த முத்தத்திலே
என் சித்தத்திலே
உண்டான பித்தத்திலே
ஓடும் ரத்தத்திலே
உருவான யுத்தத்திலே
காதல் வந்து என்னில் கூத்தாடுது

எத்திரை போட்டு என்னை நான் மறைப்பேன் - எந்தன்
பத்திரை மாற்று பொன்னே
சித்திரை வரும் வரை காத்திரு என்று - என்
நித்திரையை களவாடி போனவளே
பத்திரை மணி அடித்த பின்னும் கூட - என்
விழி திரை முட மறுக்குதடி
முத்திரையாய் உன் வார்த்தை வரும் என்று
பித்தரை போல் நான் காத்து இருக்க
பெற்றவரை எண்ணி பெரும்கவலை கொள்கின்றாய்
மற்றவரை எண்ணி நீ மன்றாடியது போதும்
கொற்றவரை கொள்ளை கொள்ள வந்து விடு கொடி மலரே!

எழுதியவர் : N Thiyagarajan (13-Nov-14, 7:54 pm)
Tanglish : kaadhal vanthathe
பார்வை : 104

மேலே