மாற்றம் ஒன்றை தேடுகிறேன்

நினைவுகளே! நினைவுகளே!!
நின்று விட மாட்டீரோ

கனவுகளே! கனவுகளே!!
கலைத்து செல்ல மாட்டீரோ

இரவு பகல் இப்படி நீர்
என்னை வதைப்பதனால்

உறவுகளை விட்டே நான்
ஓட துணிந்து விட்டேன்

நிம்மதியாய் சில நேரம்
நீட்டி படுத்திருந்து

செம்மையுறும் கற்பனையில்
சிறகடிக்க நினைக்கின்றேன்

கண் விழிக்கும் வேளையிலே
சோக பெருங்கதை தான் துணையென்று மீளுதம்மா!

பட்ட கடன் தீர்ப்பேனோ?
பார் போற்ற வாழ்வேனோ?

வெட்ட வெட்ட தழைப்பேனோ?
வேதனையை வென்று விடுவேனோ?

ஆயிரம் முறை அழுது விட்டேன்
அவல கவிதை நான் பாடிவிட்டேன்

சொல்லி அழுவதற்கு என் மனதுக்கு
சொந்தம் என்று எவருமில்லை

மனதை பிடித்தழுத்தி மயக்கத்தில் தழைக்கின்றேன்
தனியே படுத்தழுது தலையணையை நனைக்கின்றேன்

எனவே தான்

மனதுக்கு மருந்தாக

மாற்றம் ஒன்றை தேடுகின்றேன்

இது தவறா?

எழுதியவர் : N Thiyagarajan (13-Nov-14, 7:48 pm)
பார்வை : 365

மேலே