எது வரை வருவாய் என் உயிர் தோழா

நிதானமாய் சிந்தித்து
நிதர்சனமாய் சொல்லிவிடு

எது வரை வருவாய்?
என் உயிர் தோழா?

வைகறையில் கரம் பிடித்து
வசந்தம் வரை இருந்து விட்டு

புயற்காற்று மாலை வந்தால்
புறங்காட்டி செல்வாயோ?

இல்லை

சில்லறைகளை தொலைத்து விட்டு
சொந்தங்களை உதறி விட்டு
கல்லறைக்கு நான் சென்றாலும்
கரம் பிடித்து வருவாயா?

நிதானமாய் சிந்தித்து
நிதர்சனமாய் சொல்லி விடு

ஓலை குடிசையில் வாழும்
ஒற்றை தேரை நான்

உன் முயற்சியில் பேரை வாங்க - நீ நினைத்தால்
ஒய்யாரமாய் என் பின்னே வா

நம் பாதையில்
நம் வெற்றியை

கொப்பரை புத்திக்காரர்கள்
கோடி முறை மறுதலிக்கலாம்

கோபம் உன்னை தீண்டாதென்றால் - முரசு
கொட்ட என் பின்னே வா

விடைகளை விடவும்
தடைகளே இங்கு அதிகம்
நடைபோட துணிவிருந்தால்
படையெடுத்து நீ வா

துடுப்புக்கள் இல்லாமல்
நெருப்பு கடலில் நீந்த நேரலாம்
துடிப்புக்கள் உன்னிடம் இருந்தால்
வெடிப்பு கொண்டு நீ வெளியே வா

வெற்றிகள் உன்னை கொண்டாடலாம்
வேடிக்கை வார்த்தைகள் உன்னை பந்தாடலாம்
வேதனை உன்னில் மீளத்திருக்கும் என்றால்
வேண்டி அழைக்கின்றேன் விரும்பி நீ வா

சன்மானமும் கிடைக்கலாம்
தன் மானமும் இழக்கலாம்

அபிமானம் உனக்கு இருந்தால்
இக்கணமே பின்தொடர்ந்து வா

முரண்பாடுகள் நிறைந்தது எந்தன் பயணம்
உடன்பாடு உனக்கு இருந்தால் உடனே புறப்பட்டு வா

நிதானமாய் சிந்தித்து
நிதர்சனமாய் சொல்லிவிடு

எது வரை வருவாய்?
என் உயிர் தோழா?

விடை சொல்வாயோ

எழுதியவர் : நட்பு (13-Nov-14, 7:46 pm)
பார்வை : 89

மேலே