நினைத்தாலே இனிக்கும்

பேசிக் கொண்டே
இருந்தாய்......
கேட்டு கொண்டே இருந்தேன்....
சில போது
நான் பேசி
நீ
கேட்டுக் கொண்டு....

இனி ஒரு போதும்
காதலுக்கு அர்த்தம்
கேட்கப் போவதில்லை...

அது தீரவே முடியாத
அர்த்தம்....
எனக்குள் தீர்ந்ததாக
நான் நினைத்த
தர்க்கம்...

நீ எப்படி
இன்னும்
அப்படியே
இருக்கிறாய்.....
என்னையும்
அப்படியே
வைத்துக் கொண்டு.....


நீ.... எப்போதும்
நான் விட்டு சென்ற
இடத்திலேயே தான்
இருந்திருக்கிறாய்....
இருக்கிறாய்....

நான் மட்டும் தான் தூரமாகி
புள்ளியாய்...
இல்லாமலே போயிருக்கிறேன்....

என் தூர
தேசம்
கண்கள் சுருக்கி
பார்க்கையில் உன்
வெளியெங்கும்
உன் கண்ணீர்......

நீ கோடிடும்
என் பெயர்
வரும் செய்தித்தாள்களில்
எல்லாம்...
சிணுங்கிக்
கொண்டு தான் இருந்திருக்கிறது....
நம் இடைவெளி.....

இப்போது
இன்னும் சத்தமாய்
காதலை
இப்படிக் கேட்கிறேன்...

மன்னிப்பாயா.....?

இப்படிக்கு
உன்
விஜய்.

எழுதியவர் : கவிஜி (14-Nov-14, 3:12 pm)
Tanglish : Ninaithaale inikkum
பார்வை : 111

மேலே