என்னை அறிவாயா

என்னை அறிவாயா?
காரிருளில் கண்ணீர் கசிபவள் நான் !
ஞாபகம் வருகிறதா?
இரவின் வேட்டை நாயின்
இறை தான் நான் !
மறந்துவிட்டாயா ?
வலிமையிழந்த இதயமும்
வழிகள் தாங்கும் மார்புகளும் கொண்டவள் நான் !
என்னை பார்த்தாயா ?
ஆடைகள் விலக்கினாலும்
உணர்வுகளை மறைகிறேன் !
நினைத்துபார் !
மங்கி ஒளிரும் விளக்கின் சாட்சியாய்
கழியும் என் இரவுகளை !
தெரியுமா உனக்கு ?
தேவதூதனும் என்னிடம் சாத்தன் தான்-வயிற்றின்
தேவைகளுக்காய் சரணடைகிறேன் நான் !