இருட்டில் சுகம் தேடுகிறான்

அந்தி வானம் சிவக்கும் வேளை
முடிவுக்காய் இருண்ட வேளை
வௌவால் கோட்டான் புதிய நாளை
இரவை பகலாய் கொண்டு வாழும்
புதிய உலகம் அவைகளுக்காகும்
இரவின் மடியில் தூங்கும் வேளை
இதயம் மட்டும் தன் தொழிலை
இடைவிடாது தொடர்ந்து செய்யும்
சற்றே ஓய்வு பெற்றுவிட்டால்
ஓய்வாக தூங்கிவிட்டால்
நாளை என்று உனக்கு இல்லை
தூங்கச் செல்லும் அவ்வேளை
எழுவேன் உணர்வேன் நாளை என்று
நம்பித் தூங்கி விழுந்திடுவான்
எழுவேனா என்று மனம் பயந்திட்டால்
தூங்க மறுத்திடுமே அவன் கண்கள்.
வாழ மனிதன் விரும்பியதால்
பகல் முழுதும் விழித்திருந்தும்
காலம் போதா என்பதாலோ
கனவினிலும் வாழ்கின்றான்
செல்வத்தையே குவிக்கின்றான்
ஐந்தறிவு ஜீவி யாவும்
சஞ்சரிக்கும் பகல் சிலவும்
இரவை பகலாய் சில பலவும்
இரவு பகல் பாராது
சஞ்சரிப்பான் மனிதன் மட்டும்
புதுமை இவன் செயல் காண
ஓய்வின்றி உழைப்பதனால்
நிம்மதியை துழைத்து விட்டு
இருட்டில் சுகம் தேடுகிறான்
உடலதனை வதைக்கின்றான்- வாழ்வில்
முற்றுப் புள்ளி வைக்கின்றான்!
ஜவ்ஹர்