ஒன்றே குலம் ஒருவனே தேவன்

அக மலர்ச்சி
முக மலர்ச்சி !
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் !
சக்தியின் ஆக்கம்
புன்னகையில் தோற்றம் !
மதங்கள்
மனிதர்களை பிரிப்பதில்லை !
மதம் பிடித்த
மனிதர்கள் தான் !
நட்பில் இணைவோம்
நலமாய் வாழ்வோம் !
இருவரை சுற்றி ஒரு
ஒளி வட்டம் !
நல் எண்ணங்களால்
நல் வாழ்க்கை !