கொட்டாவி முட்டைகளா நீங்கள்
கொட்டாவி  முட்டைகளா  நீங்கள்?
தாடியில்லாத 
வள்ளுவனைத்தேடி 
வந்து, 
மூடியில்லாத 
திண்ணையில் 
தூங்கும் 
முகமூடிகளா நீங்கள்..... 
முகமூடி கலைத்தும் 
முகமில்லாத 
முட்டைகளா 
நீங்கள்... 
உலக்கு அறிவோடு 
அழுக்கு 
மூட்டைசுமக்கும் 
கணக்குமேதைகளா 
நீங்கள்... 
கணக்கு அறிவோடு 
உலக்குமூட்டை 
சுமக்கும் 
பல்லக்குமேதைகளா 
நீங்கள்!... 
யானையை 
கழுமரத்தில்ஏற்றிவிட்டு 
உழுநிலத்தில் 
பூனையை வதைக்கும் 
கலப்பைகளா நீங்கள்... 
காட்டின் 
கருப்பையில், 
கரிமத்தைகொட்டிவிட்டு 
அடிவயிற்றுக்கு 
அகப்பையை நக்கும் 
தெருப்பையோ 
நீங்கள்.... 
சிட்டுக்குருவியின் 
சிறைக்கூட்டில் 
சிக்கிக்கொண்ட 
சிலந்திப்பூச்சிகளா 
நீங்கள்.... 
சிலந்திப்பூச்சியின் 
சிறைக்கூண்டில் 
சிக்கிக்கொண்ட 
சிட்டுக்குருவியா 
நீங்கள்.... 
மாமியார் நாட்டில் 
வாழும் 
மன்னர்களா நீங்கள்... 
மன்னர் வீட்டில் 
வாழும் 
சாமியார்களா நீங்கள்... 
பிட்டுக்குமண்சுமந்து 
ஒரு வாய் 
பிண்டத்துக்கு, 
மறுவாயிலும் 
மண்சுமக்கும் 
வெறுவாய் ஜீவிகளா 
நீங்கள்.... 
ஒரு வாயில் 
மண்ணும்-அதே 
மறுவாயில் பொன்னும் 
புதைத்து வைத்த 
வருவாய் ஜீவிகளா 
நீங்கள்.... 
கொன்றை பூக்கள் 
கொய்ய, 
கோடி 
பொன்வண்டுகளை 
கொன்று வாழும் 
குரங்குகளா நீங்கள்! 
அக்  குரங்குகளையும் 
கொன்றுவிட்டு 
மெதுவாய் 
மென்றுதிங்கும், 
கொட்டாவிகளா நீங்கள்!

