என்னவள்
புடவை கட்டிய
பூச்செண்டு -என்னவள்
புதுக்கவிதை பாடும்
கற்கண்டு ...
நவயுக உடையில்
நாகரீக ராணி - என்னவள்
நவயுக நடையில்
நாகரீக வாணி
கண்கள் வீசிடும்
கருணைக்கு ஈடில்லை -என்னவள்
கண்கள் பேசிடும்
மொழிக்கு ஏடில்லை
வார்த்தையில் வெளிப்படும்
வாழ்வின் அர்த்தம் - என்னவள்
வார்த்தையைக் கேட்டாலே
ஊறும் புது ரத்தம்
வானத்தை அளக்கும்
கருவிகள் உண்டு - என்னவள்
ஞானத்தை அளக்கும்
கருவிகள் இல்லை