முதல் பார்வை
அசையும் பேருந்தில்
அசையாமல்
ஒருபார்வை
இதயத்தில் ஏதோ கனம்
அவள் இமைக்காமல்
பார்த்த கணம்
கண்ணாடி அணிந்த
கண்ணாடி நிலவே
உன் பின்னோடு வந்தது
என்னோட நிழலே
என்ன மொழி பேசுவாய்
என் இமை அறியாது
கண்கள் வழி பேசினாய்
ஒரு காந்த மொழி
இதுவா காதல் மொழி