அரசியல் அடிமைகள் எம்மக்கள்
கதகதப்பில் இளம் காலை
பதபதப்பில் எங்கள் சாலை
முந்தி பொழிந்த மழையில்
சாலையெங்கும் சதசதப்பில்...!
எவனோ உடைத்தானாம்
உயிரிழந்த சிலையை
ஊரே பற்றி எரியுது தீயில்
உயிரற்ற சிலைக்கு பல
உயிர்களை சேதமாக்கி
மூட்டி வளர்க்குது சாதி தீ !!
முட்டாள்கள் இருக்கும் வரை
மூலைசலவை தொழிற்சாலை
பரபரப்பாய் இயங்கத் தான் செய்யும்
எங்கள் அரசியல் மேடையில்
படித்தவனும் உண்டு பாதித்தவனும் உண்டு !
வரிபனத்தில் வாரி இறைக்கும் இலவசங்கள்
அறிக்கைவிட்ட அரசியல்வாதியின் சாதனையாம்
உலக வங்கியில் கடனாகி உன்னுடைமை பறிபோகும்
அறியாமலே ஆர்பரிக்கும் ஏழைஜாதியின் வேதனைகள் !!
கல்விக்கண் திறந்தாள் புத்திசாலியாகிடுவாய்
கஞ்சித்தொட்டி திறந்து பஞ்சம்போக்கும் பசலிகள்
வஞ்சிக்கப்படும் மண்ணின்மன்னர்கள் நாமென
வருத்தம் உணராது வாழ்க கோஷம்போடும் பலியாடுகள் !!
திட்டங்கள் அறிக்கையாய் அறைநிறைந்து கிடக்க
புதுத்திட்டங்கள் வகுத்து வாக்குவங்கியை குவிக்க
குதுகலமுடன் கொண்டாடும் குடிமக்களே
முன்புபோட்ட திட்டம் முடிவுற்றதா? உணர்ந்துபார்ப்பதில்லையே !
அரசியல் சதுரங்கத்தில் பகடையாக்கினான் மக்களை
உருண்டுபிரன்டாலும் அவனை வாழ்த்தும் கொடுமையை என்செய்ய ...