அங்கலாய்ப்பு

என்ன மனுசி நீ?
நினைத்தால் தலையில் வைப்பதும்,
வெறுத்தால் தள்ளிவிடுவதும்,...
நம்பி வந்தவரை,
தங்குதடையில்லாமல் வீழ்த்திவிட்டு,
எள்ளி நகையாடுவதுபோல்,
கண்டும்காணாமல்,
சென்றுவிடுகிறாய் எப்போதும்,
கேட்பதற்கு யாருமில்லையா உனையெல்லாம்?
என அங்கலாய்க்கிறது,
தினமும்,
நீ நடந்துபோனபாதையில்,
கடக்கும் பொழுதுகளின் வெயில் தாங்காமல்,
கிடந்துதவிக்கும் சிலஉதிர்ந்த பூக்கள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (16-Nov-14, 8:41 pm)
பார்வை : 94

மேலே