உண்மைக் காதல்
காதல் பிறக்கும் அன்றே
காதலர்கள் இன்னொரு பிறவிதான்
புது உற்சாகம் புது அன்பு பிறக்கிறது
புது வாழ்கை புது அரவணைப்பு
புதிதாக சிறகு முளைக்கும் பறவைகள் போல்
வேறு உலகம் அவர்களுக்கு தெரிகிறது
காதல் தரும் அலாதி துணிச்சல்
காதலர்களை அச்சமின்றி காதல் செய்ய வைக்கும்
உனக்கு நான் எனக்கு நீ
இதற்கு மேல் யாரால் என்ன செய்ய முடியும்
மிஞ்சினால் என்ன/ மிஞ்ச முடியாது
உண்மையும் இதுதான்
இருவர் கொண்ட இறுக்கமான அன்பு
பயம் அற்ற காதலை உருவாக்குகிறது
உண்மை உள்ள புரிதல் உள்ள காதல் புனிதமானது
ஒருவர் ஒருவருக்காக வாழ்வதில்
கிடைக்கும் இன்பம் அரவணைப்பு ஆனந்தம்
ஆண்டவனால் அவர்களுக்கு கொடுக்கப் பட்டது
உண்மைக் காதலுக்கு என்றும் தோல்வி இல்லை
உண்மைக் காதல் என்றும் அழியாத சொர்க்கமே
உண்மைக் காதல்
உள்ளம் இரண்டும் கொண்ட காதல்
உலகம் போற்ற வாழ்க வாழ்க ,