உன்னை சிந்தித்தால்
அடர்ந்த காட்டிலும், குடிசை வீட்டிலும், அழகாய் உணர்கிறேன்!
உன்னை சிந்தித்தால்...
வீசும் புயலிலும், ஆர்ப்பரிக்கும் வெள்ளத்திலும் அமைதியை உணர்கிறேன்!
அன்பே உன்னை சிந்தித்தால்...
மூடிய விழிகள் திறக்க மறுக்கின்றன கனவில்
உன்னை சிந்தித்தால்...
திறந்த விழிகள் இமைக்க மறுக்கின்றன பகலில்
உன்னை சிந்தித்தால்...
நகரும் கால்கள் நிற்பதே இல்லை
நான் உன்னை சிந்தித்தால்...
தட்டில் உணவு தீர்வதே இல்லை
உன்னை சிந்தித்தால்...
மழையும் நனைப்பதில்லை!
வெயிலும் சுடுவதில்லை!
வானிலை மாற்றங்களும் தெரிவதில்லை!
உன்னை சிந்தித்தால்...
என்னையே மறந்தேன்...என்னுலகுமும் மறந்தேனென
பொய்யுரைக்க ஆசை இல்லை!
உன்னை சிந்தித்தால்...
வேறேதும் நினைவில் இருப்பதில்லையென
மறைக்கவும் விருப்பமில்லை!!!