நீ எங்கே இருக்கிறாய்

அன்பே! அன்பே! நீ எங்கிருக்கிறாய்?
எந்தன் இதயத்தின் உள்ளிருக்கிறாய்!
அழகே! அழகே! நீ எங்கிருக்கிறாய்?
எந்தன் மனதில் நீயும் குடியிருக்கிறாய்!
அறிவே! அறிவே! நீ எங்கிருக்கிறாய்?
எந்தன் மூளை கூட்டில் அமர்ந்திருக்கிறாய்!
உயிரே! உயிரே! நீ எங்கிருக்கிறாய்?
எந்தன் உடலோடு நீதான் கலந்திருக்கிறாய்!