பூமிக்கு பூக்கள் வேண்டாம்

அய்யோ !
கடவுளே இனி
பூமிக்கு பூக்கள் வேண்டாம்
இவள் புன்னகை ஒன்றே
போதும்

நான் பொய்யென்றால்
சற்று நீயே
நேரில் வந்து பார்


ஆதியில்
நீ ஏதெனில் விதைத்த
விதையொன்று
பதினெட்டு
ஆண்டுகளுக்கு முன்
அரும்பாகி நனையாகி

சில நாட்களுக்கு முன்
முகையாகி,முகிழாகி

நேற்று தான் என்னவோ
மொட்டாகி, மலராகி

இன்று இவள்
உதடுகளில் பூத்திருக்கிறது

நான் பொய்யென்றால்
சற்று நேரில் வந்து பார்

நீயே
வியந்து போவாய்..!!!!





நானும் வியந்தே போனேன்
அன்புடன்
ஏனோக் நெஹும்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (17-Nov-14, 5:40 pm)
பார்வை : 1332

மேலே