என் காதல்

என்றும் உன்னை இழந்துவிடக் கூடாது
என்றே தோன்றுகிறது
உன்னை காணும் போதெலாம்.......

கண்ணை பார்த்தே பேசுகின்ற
கபடமிலா உள்ளத்தை உன்
கண் கொண்டு களவாடுகையில்

இப்படி ஏன் செய்தாய் எனும் வினாக்கு
இதுவரை எதுவும் செய்ததில்லை உனக்காக என
இன்று நீ கூறுகையில்

இனி என்ன செய்யவேண்டும் என்றாயிற்று
இனியும் என்ன செய்வாய் என தோன்றிற்று

நினைப்பதை மறக்க சொல்லி
நிமிடங்கள் நீ கொடுத்தாய் உன்
நினைவுகளே நிரம்பி இருந்தன அக்கணங்களிலும்

அப்பாவை கைக்காட்டி கொண்டு
அப்புறபடுத்தினாய் என்னை சொற்களில் மட்டும்
அவரே ஏற்று கொண்டால் ???

அனுதினம் உன்னை ரசிக்க நான் தயார்
அணுவளவேனும் அன்பை எதிர்பார்த்து ......./
அருண்குமார்.செ
2 இயர் ஆங்கில இலக்கியம்
goverment arts college

எழுதியவர் : Arunkumar (17-Nov-14, 5:39 pm)
சேர்த்தது : Arunkumar
Tanglish : en kaadhal
பார்வை : 111

மேலே