மின்னல் காதல்
இடியோசை நடுக்கம் கொடுக்கும்
மழைத்தூறல் கதகதப்பை பெருக்கும்
ஊதல் காற்று சிலீரென இனிக்கும்
ஈசல் பூச்சிகள் ரீங்காரம் அடிக்கும்
முழுக்க நனைந்தும் முக்காடு எதற்கு
என்று மேல் துணிகள் சரிய துடிக்கும்
மனிதன் பாதி மிருகம் பாதி சேர்ந்து
பங்கு போட்டுக்கொள்ள நேரம் பார்க்கும்
காதலன் காதலி சரி தவறு விளிம்பில்
நின்று குழம்பி கிடக்க நிறைய வேர்க்கும்
சொல்லி வைத்தது போல் மின்னல் கீற்று
வான் பிளந்து இருட்டுக்கு வெளிச்சம் சேர்க்கும்
சரி அரங்கேறியதா இல்லை தவறு நேர்ந்ததா
அறிய ஆவல் எனில் அடுத்த மின்னலுக்கு காத்திருக்கவும்