தனிமையிலொருநாள் -ரகு

தனித்தேன் - உன்னை
நினைத்தேன்
..........அந்திவெயில் குளிர்ந்தபோதும்
..........அருகிலில்லாக் காதலினால்
வியர்த்தேன்

மலைத்தேன் - உன்னில்
நிலைத்தேன்
..........மௌனமொழி யாலி(ழி)சைத்து
..........மயக்குவதை எங்குகற்றாய்
மலைத்தேன்

தேடினேன் - விழி
மூடினேன்
..........உன்னிலொரு காதல்விதை
..........உயிர்த்தெழுமா கேள்விஎழ
வாடினேன்

கவித்தேன் - அதில்
திளைத்தேன்
..........சிறகுதிரும் சோலைதனில்
..........சுற்றிவரும் தென்றலாகிக்
களைத்தேன்
***
பூவானவள் - கனவுத்
தீவானவள்
..........பார்வைஎனும் தீமூட்டி
..........புன்னகையில் நீரூற்றும்
புதிரானவள்

கலையானவள் - உயிர்
சிலையானவள்
..........கார்காலப் பொழுதொன்றில்
..........குடைமீறி நனைக்கின்ற
மழையானவள்

நிலவானவள் - அழகில்
நிலையானவள்
..........பனிவீழும் வைகறையில்
..........பகல்காணும் குளிருக்கு
நிகரானவள்

உணர்வானவள் - எந்தன்
உயிரானவள்
..........ஒருநாளில் உயிர்சிலிர்க்க
..........உருவாகும் ஓர்கவியாய்
ஒளிந்திருப்பவள்
***

எழுதியவர் : அ.ரகு (18-Nov-14, 12:34 pm)
பார்வை : 91

மேலே