காம தேசம்

கற்பழிப்பு குற்றங்களில்
உலகின் முதல்நிலை அடைந்து
மானம் காத்து விட்டாய்

காமனின் மாமன் மச்சான்கள்
நீயென்ற பெயரை
காப்பாற்றி விட்டாய்

காமலீலா களியாட்டங்களை
கற்றுத் கைதேர்ந்து
கற்றலின் பெற்றல் இதுவோ?
விரசங்களை கலையென்று
விளங்காமல் விளங்கி
கண்ட வினைப் பயனும் இதுவோ?

நிர்வாணக் கோலம் கலாரசனை
முக்தி நிலையென்பாய்
பக்தி பரவசத்தில் பார்த்து உருகுவாய்

விரசமெனும் விழிகளுக்கு
கலை தெரியாதென்பாய்
விளையாட்டுக்கும் கூட
உன் வீட்டு பெண்களை
இச்சோதனைக்கு உட்படுத்த மாட்டாய்

மாற்றான் வீட்டு பெண்னென்றால்
பார்வையில் கற்பழிப்பாய்
பலவித வியாக்கியானமும்
பக்தி மொழியில் சொல்வாய்

இழுத்துப் போர்த்தினால்
பெண்ணடிமைத் தனம் என்பாய்
ஆடை விலகும் சிறு இடத்திலும்
கண்டபடி மேய்வாய்

இயற்கை எல்லாம்
பெண் தெய்வம்
பாவம் உயிர் கொண்ட
பெண்ணை மட்டும்
கற்பழிக்க துடிக்கும்
உன் எண்ணம்

என் தேசத்தில்
துரியோதனன்கள்
வந்து கொண்டேயிருக்கிறார்கள்
கண்ணன் மட்டும் வருவதேயில்லை

கடவுள்களும்
கற்பை சூறையாடிய கதைகள்
இந்த மண்ணுக்கு பெருமை
இந்தியன் என்பதில் இப்போது
நானடைகிறேன் சிறுமை

எழுதியவர் : அன்பு மல்லிகை (19-Nov-14, 9:41 am)
Tanglish : kaama dhesam
பார்வை : 380

மேலே