அன்பின் மொத்த உருவம் அம்மா 555

அம்மா...

அன்புக்கு இலக்கணம்
கொடுத்தவளும் நீதான்...

பண்புக்கு புத்தகமும்
நீதான்...

நான் செய்யும் தவறுக்கு
பொறுமையாக இருப்பதில்
பூமியும் நீதான்...

சில நேரங்களில்
கண்டிப்பதில் தந்தையும் நீதான்...

அன்பின் மொத்த
உருவம்...

அன்னை தெரேசாவும்
நீதான்...

படிப்பு சொல்லி
கொடுப்பதில் ஆசானும் நீதான்...

நம் வீட்டிற்கு
அரசியும் நீதான்...

அன்போடு
பேசும் தோழியும் நீதான்...

என்னை தாலாட்டி தூங்க
வைத்த தெய்வமும் நீதான்...

பூமியில் நான் வணங்கும்
உயிருள்ள தெய்வமும் நீதான்...

என் அன்பு அன்னையே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Nov-14, 3:41 pm)
பார்வை : 304

மேலே