வங்கி ஊழியரை வாழ்த்தி ஒரு வெண்டுறை

வங்கி ஊழியரை வாழ்த்தி ஒரு வெண்டுறை ..
வாழ்கின்றேன் இன்னும்நான் என்றுருதி மொழிகூற
வங்கிக்குச் சென்றங்கே நின்றதும் ஒருவர்முன்
அச்சடித்த காகிதத்தை என்முன்னே நீட்டியவர்
கோடிட்ட இடத்திலெல்லாம் பூர்த்தி செய்தபின்னால்
கொண்டுசெல்வீர் வேறொருவர் முன்என்றார்
சொற்பமே என்றாலும் ஓய்வூதியம் பெறுபவரை
அற்பர்களென் றெண்ணாமல் கடமை உணர்வுடன்
காத்திருக்க வைக்காமல் இட்ட பணியை
செவ்வெனெச் செய்திட்ட வங்கி ஊழியரை
வாழ்த்துகிறேன் வெண்டுறை யில்