தனிமையும் துணையல்ல
கடவுளின் தெய்வீக குழந்தை
*********இவள்*******
சாதி இல்லா சுதந்திரப் பறவை
********இவள்********
முகமூடி இல்லா உள்ளம்
******இவள் *******
எதையும் பிரித்தறியா வெல்லம்
*****இவள் ******
கிடைத்ததை வைத்து வாழும் இல்லம்
*****இவள் ******
ஆசை இல்லா வாழ்க்கை
*******இவள் *****
தாய் அறியாப் பாசம்
****இவள் *****
இத்தனை இருந்தம் வெறுமை
***இவள்******
பெற்றது பொழுதுபோக்காய்
விட்டது தெருமுனையில்
கொடுத்தவனே எடுத்துக் கொண்டார்
அனாதையாக இருந்த இவளை ஆதரவாக .
வாழ்க்கையோ வாசனையில்ல மலர் போல
தொட்டதெல்லாம் தீட்டானது
நெருங்கி வந்தால் எல்லாம் விலகிப் போகுது
தனிமையில் அழுதால்
தலையணையும் துணையில்லை
கவலை மறைக்க சிரிப்பு மட்டும் வரமாக
கண்ணீர் மட்டும் தாராளமாக
தாய் அன்பு தேடினால் நண்பர்கள் கிடைக்கவில்லை
நண்பர்கள் அன்பு தேடினால் தகப்பன் அன்பு கிடைக்கவில்லை
பரிதாபவமும் கிடைக்கவில்லை
பாசமும் கிடைக்கவில்லை
வேஷம் போடும் மனித வாழ்வில்
அனாதை என்ற ஒற்றை வார்த்தை மட்டும் நிரந்திரமாக
பொத்தி பொத்தி தன்
நெஞ்சுக்குள்ளே துன்பங்களை சேமிக்கிறாள்
ஒரு இன்பம் வந்து எல்லாத் துன்பத்தையும் துரத்திவிடும்
என்ற நம்பிக்கையில் .....