வாழ்த்துக்கள் சியாமளாம்மா

சித்திரம் கவிதைபல தத்துவ மொழிகளினை இத்தளம் பதிந்துதரும் கவியாழி
எத்தரை திருத்தத்தலைக் குட்டிட முனைந்துவிசை மெட்டினை புகன்றுதரும் கவியாழே
வித்தகி சியாமளாம்மா புத்தியில் நினைந்ததனை முத்தமிழ் சிவக்குமரன் தருவானே
சித்தனை தமிழ்க்குகனை நித்தமும் கவிபுனைந்து பத்தியில் தரும்கவிதை தருமாசி


(இது ஈற்றடியின் எழுத்துக்கள் எல்லாம் முந்தைய மூன்றடிகளில் வரப்பாடப்படுவது—கூட சதுக்கம்)
மதிப்பிற்குரிய அம்மா!
தங்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும் தமிழ் ஆர்வத்தால் எழுதியுள்ளேன் ஏற்றுக்கொள்க
இது ஆசி அல்ல அன்பு
அன்புடன்
சு.ஐயப்பன்

எழுதியவர் : சு.ஐயப்பன் (23-Nov-14, 12:12 pm)
பார்வை : 100

மேலே