உனக்காய் தானே
![](https://eluthu.com/images/loading.gif)
உனக்காய்
தானே பூவாய்
மலர்ந்தேன்...!
தேன் பருகி
இசைத்திட மாட்டாயா?
வந்தருகில்
உட்கார்ந்து...
உனக்காய்
தானே துளியாய்
விழுந்தேன்...!
ஏந்தி நீயும்
ரசித்திட மாட்டாயா?
உள்ளங்கை
நீட்டி...
உனக்காய்
தானே நிழலாய்
சாய்ந்தேன்...!
அருகில் வந்து
இளைப்பாற மாட்டாயா?
உன் தலை
சாய்த்து...
உனக்காய்
தானே அலையாய்
தவழ்ந்தேன்...!
கரை தொட்டு
மகிழ்வுற மாட்டாயா
உள்ளங்கால்
நனைத்து...