பறக்கட்டும் புலிக்கொடி - தமிழன் பரிதி வருங்கால உழவன்

" பறக்கட்டும் புலிக்கொடி! " - தமிழன் பரிதி வருங்கால உழவன்

தத்தனான தத்தனான தத்தனான தானனா...
தத்தனான தத்தனான தத்தனான தானனா...

சுற்றிருக்கும் எட்டுத்திக்கும் எங்கள் முரசு முழங்கட்டும்!
எதிரி இல்லை எதிரி இல்லை என்று சொல்லி ஒலிக்கட்டும்!
தலைவனவன் வீர உரையில் சிந்தைச் சொக்கிப்போகட்டும்!
நினைவேந்தல் விளக்கொளியில் நிலவொளியும் கரையட்டும்!

மாவீரர்கள் புகழ்பாட தமிழறிஞர்கள் கூடட்டும்!
விதைத்த விதை விளைந்ததென்று புதுப்பரணி பாடட்டும்!
மாவீர்கள் தாய் தந்தையர் உறவுகள் மனம் நெகிழட்டும்!
உணர்வற்றவர் இதைப்பார்த்து உணர்வு கொண்டு எழும்பட்டும்!

ஈழக்கூட்டில் இருந்து சென்ற புலத்தமிழர் மீளட்டும்!
பிறந்த மண்ணில் இழந்த உரிமை மீண்டும் பெற்று சிறக்கட்டும்!
அரசனுக்கும், அறிஞனுக்கும் அரியனைகள் கிடைக்கட்டும்!
இயற்கை அன்னை உயிர் கெடுக்கா தொழில்நுட்பம் பெருகட்டும்!

வெற்றிக் கொண்ட ஈழம் கண்டு அழுத குழந்தைச் சிரிக்கட்டும்!
தமிழ் படிக்கச் சிறுசுகளும் செஞ்சோலைக்குச் செல்லட்டும்!
அவனிக்கே அன்னமிட இளசுகள் ஏர் பிடிக்கட்டும்!
எதிரியற்ற நிலையிலங்கு புலிகளும் நீர்ப்பாய்ச்சட்டும்!

வீரத்தை நிலைநாட்டிய தலைவனவன் மகிழட்டும்!
வெள்ளையுடையை மீண்டும் அணிந்து அமைதி மொழியைப் பரப்பட்டும்!
அதைக்கேட்டு உலகமிங்கு புது புத்தனைக் காணட்டும்! - இவன்
தலைவனல்ல இறைவனென்று தரணி முழுக்க போற்றட்டும்!

மனம் யாவும் செல்லப்பாவின் தேனிசையில் நனையட்டும்!
கைம்பெண்கள் மறுமணத்தால் கெட்டிமேளம் கொட்டட்டும்... டும்... டும்... டும்...
இவையாவும் இத்தினமே இப்போதே நடக்கட்டும்!
பேரியற்கையும், பெருந்தமிழும் இதற்குத் துணைபுரியட்டும்!

எழுதியவர் : தமிழன் பரிதி வருங்கால உழவ (24-Nov-14, 11:00 pm)
பார்வை : 139

மேலே