தமிழைக்காப்போம்

கலங்குகிறாள் தமிழன்னை ; கண்ணீர் விட்டுக்

கதறிதினம் அழுகின்றாள் ! தமிழர் எல்லாம்

இலங்கையிலே பட்டபாட்டை எண்ணி எண்ணி

இதயத்தால் துடிதுடித்து அழுதாள் அன்னை!

விலங்கெனவே தமிழர்களை நடத்து கின்ற

வெங்கொடுமை பொறுக்காமல் இன்றும் கூட

நலங்கெட்டு அழுகின்றாள்! நற்றாய் அவளின்

நலம்பேணிக் காத்திடுவோம் தமிழா வாவா !




அழுகின்ற தமிழன்னை கண்ணீர் துடைக்க

அணிதிரண்டு வாருங்கள்! உயிராய்ப் போற்றித்

தொழுகின்ற தாயவளின் தவிப்பைப் பார்த்து

துடிப்பின்றி உணர்வின்றி இருத்தல் வேண்டாம்.

எழுகின்ற பகைதன்னை வீறு கொண்டு

எதிர்த்திடுவோம் ; வென்றிடுவோம் ! இல்லை என்றால்

விழுகின்ற நிலைக்கேனும் அன்னை வந்து

விடுவாளே ! உயிரீந்தும் தமிழைக் காப்போம்!

எழுதியவர் : அண்ணாதாசன் (24-Nov-14, 9:29 pm)
பார்வை : 91

மேலே