உயிரில் நுழைந்த உணர்வுகள் - இராஜ்குமார்
உயிரில் நுழைந்த உணர்வுகள்
=============================
உறக்கம் கேக்கும் கனவுகள்
இரக்கமின்றி என்னில் இறக்குதடி ..!
உடுக்க வேண்டிய உடைகள்
நடுக்கமின்றி என்னில் கசங்குதடி...!
சிதைக்க முயன்ற தவறுகள்
தயக்கமின்றி என்னில் ஊறுதடி ..!
உனைபிடிக்க சொல்லும் பிம்பம்கள்
பிழையின்றி என்னில் பிறக்குதடி ..!
அழிக்க நினைக்கும் நிழல்கள்
விழியின்றி என்னுள் வீழுதடி...!
நடிக்க நகரும் நளினங்கள்
ரசனையின்றி என்னில் முளைக்குதடி ..!
முடிவில் முனையும் தேடல்கள்
நொடிகளின்றி என்னில் நிற்குதடி ..!
உயிரில் நுழைந்த உணர்வுகள்
காதலின்றி என்னில் கதறுதடி ..!
- இராஜ்குமார்