கவிதையில் ஒரு பயணம்

ஏடு எடுத்து எழுதி முடிக்க
நாடும் பொருள் என்னில் இல்லை
பாடும் சொல்லில் கீதம் கூட்ட
ஆடும் ஊஞ்சலில் மெல்லப் பேசுவேன்
 
ஆசை தரும் நிறைந்த கவிதைகள்
நெஞ்சில் தாவும்; என்னில் மேவும்
சித்திரச் சொற்களில் கவிஞர் காட்டும்
மந்திர வானம் மயக்கும் என்னையும்.
 
மனமும் இதயமும் ஒன்றாகப் பேச
தளம் ஒன்று தானாய் அமையும்
பார்வையும் பாவமும் நன்றாய் சேர
தாளம் ஒன்று தேனாய் நனையும்.
 
காணும் பொருளில் பேசும் மொழிகளே
கேட்கும் ஓசையில் சங்கீதங்களே
நினைவிலே அசையும் கடந்த பொழுதுகள்
இமையில் பனிக்கும்; எழுத்தாய் எழும் .
 
நாளும் நானும் தேடும் வசந்தமே
வாசலில் பூவாய் கோலம் போட
புதுமை பிறப்பாய் எண்ணம் விழிக்க
எங்கோ பறக்கிறேன் உலகை மறந்தே  !

எழுதியவர் : மமனோகர். (25-Nov-14, 12:06 am)
பார்வை : 114

மேலே