இராமாயணம்

வில்லை வளைத்த ராமன்
மணம்முடித்தான் சீதையை

வரம்பெற்ற கையேகி
அவர்களை அனுப்பி வைத்தாள்
வனவாசம்

மாயமானின் வருகையில்
மனம் லயித்தால் சீதையவள்

மங்கையவள் மணம் அறிந்து
மானை தொடர்ந்து சென்றான்
ராமனவன்

தருணம் அறிந்து சீதையை
கவர்ந்து சென்றான் ராவணன்

சடகேயு இடையில் வந்து
கடத்தி சென்ற திசை தான் உரைக்க

வாயுபுத்திரன் வழிகாட்ட
புறப்பட்டனர் போர்க்களம் நோக்கி

தூது செல்ல வேண்டுமென
தூய ராமன் சொல்ல
கணையாளி பெற்று புறப்பட்டான்
அனுமான்

சீதை கண்டு சேதி சொல்லி
ராவனணன் கண்டு எச்சரிக்கை
விடுக்க

கடும்கோபம் கொண்டு இராவணன்
தீ இட்டான் வாயுபுத்திரன் வாலுக்கு.

கண்டதை கொளுத்திவிட்டு
வானரம் ராமன் பாதம் வந்தான்

போர் மூண்டுட புவி அதிர்ந்தது
திருந்திய விபிஷணன் ராமர் படையணி சேர

மாண்டு மடிந்தனர் இராவணனோடு
சோதரரும்

இலங்கையில் விபிஷணன் முடி சூட
அன்னை சீதை பாரதம் வந்தாள்

மாற்றான் கவர்ந்தவள் உத்தமியோ
சங்குகள் ஊதினர் சுற்றத்தினர்
சந்தேகம் தீர்த்திட உத்தமியாள்
தீக்குளித்தால் சடுதியிலே

சுட்டுடுமோ தீ தீயையே
சீதையவள் என்றும் தீயன்றோ

சுருக்கிச்சொன்னேன் ராமாயணம்
மீண்டும் தொடர்வேன் வேறு ஓர்
நாள் .

(ஓர் சின்ன முயற்சி செய்தேன் எமது வரலாற்றை எளிய முறையில் அனைவரும் படிக்க...தவறுகள் இருப்பின் மன்னிக்கவும

எழுதியவர் : கயல்விழி (25-Nov-14, 7:32 am)
பார்வை : 578

மேலே