மலரும் காதலாய்

தூரிகை பிடிக்கும்
விரல்களின் நடனம்
வண்ண ஓவியமாய் ....!

சுரங்களின் அபிநயம்
நாவின் அசைவில்
இனிய சங்கீதமாய் ....!

ஜதிகள் பேசும்
பாத கொலுசொலி
பரத நாட்டியமாய் ....!

உளியின் உரசலில்
கல்லும் வடிவாகும்
எழில் சிற்பமாய் ....!

எண்ணங்களின் குவியல்
தாளில் உருப்பெறும்
கவின் கவிதையாய் ....!

விழிகளின் தீண்டலில்
துடித்த இதயம்
மலரும் காதலாய் ......!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (25-Nov-14, 1:02 pm)
Tanglish : malarum kathalaai
பார்வை : 110

மேலே