காதல் கிறுக்கன்

போய்விடு என்று எளிதாக
சொல்லி சென்றுவிட்டாய் ...

ஆனால் என்னை விட்டு விலகி
நீ சென்றால் என்ன ஆவேன் என்று
ஒரு நிமிடம் யோசித்தாயா ??.

உன் வாழ்க்கையை நினைவில் கொண்டு
என்னை விலக சொன்னயே ??

ஆனால் நீ இல்லாத வாழ்க்கையை
என்னால் கனவில் கூட நினைத்து
பார்க்க முடியாது என்பதை எப்படி மறந்தாய் ??

ஒவ்வொரு நொடியும் என் வாழ்வின்
அர்த்தமே நீதான் என்ற நிலையில் ...
ஓரே நொடியில் என் வாழ்வை
அர்த்தமற்றதாய் மாற்றி செல்ல உன்னால் எப்படி முடிந்தது ??

இப்பிறவியின் பயனை
உன்னால் அடைந்த நிலையில் ...
காலம் நம்மை இப்பிறவியில் சேர விடவில்லை என்று
விதியை எப்படி உன்னால் குற்றம் கூற முடிந்தது ??

முன்பு எனை உனக்கு பிடிக்க கூறிய காரணங்களை
கொண்டே எனை பிடிக்கவில்லை என்று கூறி...

உன்மீது
காதல் கிறுக்கனாக வலம் வந்த என்னை
இன்று நிஜத்தில் கிறுக்கனாக மாற்றி
வீதியில் வலம்வர விடவா இப்படி செய்தாய் ??

ஆனால்
ஒன்றை மட்டும்
நீ இறக்கும் வரை நினைவில்கொள் !!...

இப்புவியில் நான் எவ்வாறு மாறினாலும்
என் நினைவில் உள்ளவள் "நீ " மட்டுமே என்று!! .......

எழுதியவர் : பிரதீப் நாயர் (25-Nov-14, 6:35 pm)
Tanglish : kaadhal kirukan
பார்வை : 276

மேலே