மழலையர்க்கு அருள்வாய்

நேற்றும் அறியா
இன்றும் அறியா
நாளையும் அறியா
பூஞ்சிறார் வாழ்வது
நகர்ந்திருக்க....

நஞ்சை பூசி
பெருஞசுமை ஏற்ற -கல்
நெஞ்சத்துக் காரர்கள்
வஞ்சகச் செயல் புரிய
காத்திருக்க...

தன் விருப்பமே
உன் விருப்பமென
கண் மூடியே - கல்வி
உன்னில் திணிக்கப்
பார்த்திருக்க...

வருவது அறியா
வளர் இளம் மழலையின்
தளிர் இளம் புன்னகை
விலை கொடுத்தே
மறையாதிருக்க.,.

புரியாப் பொருளே
பரிந்திடல் வேண்டும்
அறியாச் சிறார்க்கு
தெரியாமல் நான்
வேண்டியிருக்க...

அருள்வாய் நிறைவாய்...

எழுதியவர் : முரளி (25-Nov-14, 7:59 pm)
பார்வை : 110

மேலே