துளிப்பாக்கள்

வங்கியில் கடன் வாங்கவில்லை
விவசாயி வருத்தம்
விவசாயக் கடன் தள்ளுபடி !!
நாசியை மூடிக்கொண்டு விற்பனை
சுவாசம் செய்வதற்காய்
கருவாடு !!
மின் இணைப்பு விண்ணப்பத்தோடு
இணைப்பாய் காந்தி நோட்டு
அன்றே எரிந்தது விளக்குகள் !!
மருமகள் கழுத்தில் புதிதாய்
பத்து பவுன் சங்கிலி
மாமியார் கண்களில் தூசி !!
மூக்கைப்பிடித்து வாங்கி சமைத்து
மூக்கு பிடிக்க உண்டார்கள்
கருவாட்டுக் குழம்பு !!