புது விடியலில் பூத்த மல்லிகை
![](https://eluthu.com/images/loading.gif)
புது விடியலில் பூத்த மல்லிகை - அவள்
புன்னகையில் பல் வரிசை......!!
ப - எழுத்தில் தமிழ் மொழி கண்டேன் - அந்த
பட்டென்ற சிரிப்பில் பல் வரிசை...!!
காதலிக்கும் போதும் கற்பனையில் தமிழோ என - அவள்
கடுப்புடனே எனைக் கேட்டாள்......!!
கண்ணே தமிழோடு உன்னை ரசித்தேன் - அதனால்
கருத்தினில் நீ இனிமை என்றேன் நான்....!!
கண்களில் பிறப்பது காதல் இல்லை - அது
கருத்தினில் இனிப்பது என்றே உணர்ந்து.......
அவள் சிரிக்க - சிரிக்க - சிரிக்க மீண்டும் ரசித்தேன்
புது விடியலில் பூத்த மல்லிகை - அவள்
புன்னகையில் பல் வரிசை......!!
ப - எழுத்தில் தமிழ் மொழி கண்டேன் - அந்த
பட்டென்ற சிரிப்பில் பல் வரிசை...!!