காதல் மனதில் கலப்பாயா - இராஜ்குமார்

காதல் மனதில் கலப்பாயா
==========================

நிலவாய்
தொடர்ந்து வருவாயா ...?
---மண்துகளாய் உடைந்து நான் ரசிக்க ..!

தீயாய்
இருளை கிழிப்பாயா ..?
---விறகாய் சிதைந்து நான் எரிய ...!

முகத்தை
கனவில் மறைப்பாயா ..?
---இரவில் சில நொடி நான் உறங்க ..!

விழியை
எனக்கே தருவாயா ...?
---விண்ணில் புதிதாய் நான் விதைக்க ..!

அழுகை
அடியோடு விடுவாயா ..?
---கண்ணீரை விசும்பி நான் விரட்ட ..!

கவிதை
வரிகளை படிப்பாயா ..?
---எழுத்தின் வடிவாய் நான் மிளிர ..!

பசுமை
அழகில் உறைவாயா ..?
---பறவை சிறகாய் நான் பறக்க ..!

காதல்
மனதில் கலப்பாயா ..?
---காதல் உருவமாய் நான் பிறக்க ..!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (26-Nov-14, 11:55 am)
பார்வை : 107

மேலே