நாட்டு கோழி சமச்சிருக்கேன்

நாட்டு கோழி, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு
எடுத்து வெச்சு மணமணக்க பெருங்காயம்
ஒல கொதிக்க பச்சரிசி அதையும்
கூட சேர்த்து வெச்சு சமைக்க போறேன் மாமா...
சத்தியமா உன்ன கவுக்க போறேன் ஆமா....

வெட்டி வெச்ச நாட்டு கோழியில இஞ்சி பூண்டு
தட்டி போட்டு மஞ்சப்பொடி மொளகா தூள்
தூவி விட்டு எழுமிச்ச சாறு ஊத்தி வெச்சு
காத்திருக்கேன் அது நல்ல உப்பி வர....

கட கண்ணியில அரச்ச மசாலா வாங்க
நா என்ன கூரு கெட்டவளா....
மெளகு சீரகம் இஞ்சி பூண்டு கிராம்பு ஏலக்காய்
வெச்சு அரச்ச வீட்டு மசாலா போட்டிருக்கேன்.....

காரத்துக்கு பச்சை மொளகா ரோசத்துக்கு கல்லு உப்பு
இத்தனையும் எடுத்து வெச்சு ஊரவெச்ச கறியோட
எம் பாசத்தையும் கலந்து வெச்சேன்
பந்தி முடிஞ்ச கையோட என்ன
பரிசம் போட நீ வரணுமுன்னு....

எங்காத்தா வாங்கி வெச்ச மதுர மஞ்சட்டியில
மண்ணோட வாசமும்
இந்த பொண்ணோட பாசமும் சேர்ந்திரிக்க....
அதனையும் போட்டு கறி சோறு செஞ்சு வெச்சேன்..

வா மாமா சாப்புடலாம்
வயசு புள்ள கூப்புடறேன்.....
ஆக்கி வெச்ச சோறும்
தேக்கி வெச்ச அன்பும்
வீணாகலாமா என்ன விரும்பி வா மாமா...

எழுதியவர் : சந்தியா பிரியா (26-Nov-14, 12:55 pm)
பார்வை : 306

மேலே