ஆண் அழகன்

நடந்துவந்த பாதையினால்
கால்களில் காயங்கள்
மனதிலோ காரிருள்
வெளிச்சமும் அமைதியும் தேடி

விண் வெளியில் பயணம்
புதிய உலகமொன்று கண்டேன்
தோழமையாய் ஒருவரும் கிடைத்தார்
அன்பை விதைத்து நட்பை வளர்த்தோம்

நாட்கள் நகர நகர
தென்றல் காற்று என் வாசலில்
பூந்தோட்டம் என் வீட்டை சுற்றி
மகிழ்ச்சி பூக்கள் மனதில்

பாதைகளில் பூ படுக்கை ..
சொல்லவா அவரை பற்றி ....
சொல்லில் அடங்கா ஆண் அழகன்
எழுத முடியா புது கவிதை

மனதை வருடி செல்லும் மெல்லிசை
கட்டிபோடும் உயர்ந்த அன்பு
வியக்கவைக்கும் கலைவண்ணம்
எனக்கும் முகவரி தந்த முதல்வன்

பல குணங்கள் பல முகங்கள்
பாராட்டி முடியா நல்லொழுக்கம்
எல்லா உறவுவும் உன்னில் அடங்கும்
இனிய தோழனே ...
என்றும் தோழியாய் ரசிகையாய்
நான் நான் நான் ..

எழுதியவர் : யசோதா காந்த் (26-Nov-14, 12:46 pm)
சேர்த்தது : Adam Biju1
Tanglish : an azhakan
பார்வை : 4317

மேலே