ஒரு விடை சொல் விதியே
..."" ஒரு விடை சொல் விதியே ""...
வாழ்வே வேண்டாமென
வந்த என் பாதையில்
வேண்டுமொரு வாழ்வென்று
வேண்டிய சில நெஞ்சங்களின்
வெற்றியென்று சொல்வதா,,,
வேண்டுதல் நிறைவேறி
வேதனைகள் மாற்றிடும்
காயத்தின் களிம்பாய்
குளிர்ச்சியாய் இருக்க
மகிழ்ச்சியை தந்திடுமா,,,
இன்றும் என்றுமாய்
என் மனதோடு மனது
மல்லுக்கு நிற்கும்
விதியினை வெல்லும்
சக்தி மதிக்கு வந்திடுமா,,,
தூரத்து புள்ளியின்
உண்மையின் நிலையை
புரியவில்லை ஒன்றும்
புலப்படவில்லை தெரியவில்லை
ஏதும் தெளிவடையவில்லை,,,
என்றும் உங்கள் அன்புடன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...